திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் 3 வயது சிறுவனை கைகளை கட்டிப்போட்டு ஆசிரியர் மற்றும் உதவியாளர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்திய்ள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படிக்கும் 3 வயது மாணவனை ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மாணவனை தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவான தாக்குகுதலில் ஈடுப்பட்ட ஆசியரியரை போலீசார் கைது செய்தனர். திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோடு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (33) இவரது 3 வயது மகன் (ஷர்வின்,) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் தாக்கியதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பள்ளிக்குச் சென்று விசாரித்த சிறுவனின் தந்தை கோபிநாத், வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்வையிட்டுள்ளார். அப்போது சிறுவனின் இரு கைகளையும் கயிற்றால் கட்டப்பட்டு தாக்கப்படும் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதனை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பள்ளியில் 3 வயது சிறுவன் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவது திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் ப்ரீக்கேஜ் மாணவன் கைகளை கட்டி தாக்கப்பட்ட நிலையில் நேற்று பள்ளி ஆசிரியர் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை பள்ளி மாணவனுக்கு நீதி வேண்டி வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடைபெற்ற நிலையில் திடீரென இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பேரணியாக வந்து பள்ளியின் முகப்பு கேட்டுகளை உடைத்து. 50க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே நுழைந்து பள்ளி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக் குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.























































