வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் தலைவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கடிதம்
யாழ் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் தலைவரும் நடுவர் சங்க உறுப்பினருமான நகுலேஷ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வடமராட்சி கிழக்கின் முன்னணி கழகமான உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு நடுவர் சங்கம் ஒழுங்கமைத்து நடாத்திய அமரர் யூட்மெரின் நினைவுக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் அண்மையில் உடுத்துறை செந்தமிழ் மைதானத்தில் இடம்பெற்றது
இதன்போது இறுதி போட்டியில் மோதிய கொடுக்குளாய் சக்திவேல் மற்றும் உடுத்துறை பாரதி அணிகளுக்கிடையிலான தண்ட உதையில் நடுவர்களின் தவறான தீர்ப்பால் குழப்பம் ஏற்பட்டு போட்டி இரத்து செய்யப்பட்டது
இந்த நிகழ்வின் போது வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் தலைவரும்,நடுவர் சங்க தலைவருமாகிய நகுலேஷ்வரன் என்பவர் ஒலிவாங்கியில் தவறான வார்த்தை பிரயோகங்களை பாவித்தார்
அவரிடம் இருந்து உடனடியாக உதைபந்தாட்ட லீக் செயலாளர் குறிஞ்சிக்குமரனால் ஒலிவாங்கி பறிக்கப்பட்டு மன்னிப்பு கோரப்பட்டது
ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவரின் குறித்த செயற்பாட்டிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தை வடமராட்சி கிழக்கின் முன்னணி கழகமான உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் கடிதம் மூலம் கோரியுள்ளது






















































