தமிழ்நாடு – திருச்சியில் நடைபெற்ற மாவட்ட மட்ட ஐந்து கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டப் போட்டியில் பங்கேற்று, மூன்றாவது இடத்தைப் பெற்று ஈழத்தமிழ்ச் சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டப் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.இதில் 13 வயதினருக்கான ஐந்து கிலோமீற்றர் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட ஜெ. டிலாஜினி மூன்றாமிடத்தைப் பிடித்திருந்தமையுடன், பணப்பரிசு மற்றும் சான்றிதழினையும் பெற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஏதிலிகளாக வசித்து வரும், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜெயக்குமார் – அருள்ஜோதி தம்பதியரின் புதல்விகளான தனுஜா மற்றும் டிலாஜினி ஆகியோர் நீண்டகாலமாகப் பாடசாலை, கல்லூரி, மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய மட்டம் என இந்திய அளவிலான நீச்சல் போட்டிகளிலும் தமது அபாரத் திறமைகளை வெளிப்படுத்தித் தொடர்ச்சியான சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













































