இலங்கை மத்திய வங்கி (CBSL), வாகனக் கடன்கள் மற்றும் குத்தகை வசதிகளை (leasing facilities) வழங்கும் போது வாகனங்களின் மதிப்பீட்டை முறைப்படுத்தும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிதி நிறுவனங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘கடன்-மதிப்பு விகித’ (Loan-to-Value – LTV) வரம்புகளைத் தவிர்ப்பதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த புதிய விதிமுறைகள், 2026 நவம்பர் 9 அன்று வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் 03-ஆம் இலக்க வழிகாட்டல்களின் கீழ் கொண்டுவரப்பட்டு, 2026 நவம்பர் 10 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்த வழிகாட்டல்கள், வாகனங்களை வாங்குவதற்காகக் கடன் வசதிகளை வழங்கும் உரிமம் பெற்ற வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகை நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
திருத்தப்பட்ட விதிகளின்படி, முற்றிலும் புதிய, பதிவு செய்யப்படாத வாகனங்களின் மதிப்பு, அங்கீகரிக்கப்பட்ட முகவர் வழங்கும் வரி விலைப்பட்டியலில் (tax invoice) குறிப்பிடப்பட்டுள்ள, செலுத்த வேண்டிய இறுதி விலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
அதேவேளையில், பயன்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட (reconditioned), பதிவு செய்யப்படாத வாகனங்களின் மதிப்பீடு, விற்பனையாளரின் வரி விலைப்பட்டியலில் உள்ள இறுதி விலை அல்லது சுங்க அனுமதி (Customs clearance) பெறப்பட்ட நேரத்தில் கணக்கில் கொள்ளப்பட்ட மதிப்பு ஆகியவற்றில், எது பொருத்தமானதோ அதன் அடிப்படையில் அமைய வேண்டும்.

























































