முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிவில் செயற்பட்டாளரும் சுதந்திரத்தை பாதுகாப்போர் என்ற அமைப்பின் தலைவருமான ஷிரந்த அமரசிங்க என்பவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதுவரையில் குற்றவாளிகள் உரிய வகையில் தண்டிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் இது தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்ட போது, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபராக கோட்டாபயவை பெயரிடாமல் வெளிநாட்டுப் பயணத் தடையை நீடிப்பதில் பிரச்சினை காணப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எதனால் கோட்டாபயவிற்கு எதிரான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்டாபயவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு உண்டு என அசாத் மெளானா என்ற நபர் குற்றம் சுமத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட போதிலும் அவர் ஆட்சிப் பீடம் ஏறவில்லை என தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சதித் திட்டத்தின் மூலம் ஆட்சி பீடம் ஏறியது சுரேஷ் சலே அன்றி கோட்டாபய ராஜபக்சவேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
சலே என்பவர் கோட்டாபய ராஜபக்சவின் செல்லப் பிராணி மட்டுமேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அல்லது சட்ட மா அதிபர் திணைக்களம் எதனால் கோட்டாபய ராபஜக்சவை குறைந்தபட்சம், ஈஸ்டர் தாக்குதலின் சந்தேகநபராகக்கூட பெயரிடவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் இன்று வரை அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சலே தனது கணனியின் கடவுச் சொற்களை வழங்காமை தொடர்பிலேனும் இதுவரை காலம் எதனால் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் ஷிரந்த அமரசிங்க இந்த பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

























































