வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்கள் தங்களது சொந்தக்காலில் சுயதொழில் செய்து முன்னேறும் நோக்கில் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்குச் சுயதொழில் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதியில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இன்று காலை கொழுப்பு டேம் வீதி (Dam Street) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, மாநகர சபை ஆணையாளர் மேயர் விராய் கெலி பலசதார், கொட்டாஞ்சேனை மேற்கு பிரஜா சக்தி தலைவர் எஸ்.ஆனந்தகுமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன் ஒரு கட்டமாக, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதியின் பிரஜா சக்தியின் தலைவர் எஸ். ஆனந்தகுமார் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 2 மில்லியன் ருபாய் ஒதுக்கப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட 24 பேருக்கு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு உதவி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இதனூடாக அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே எஸ்.ஆனந்தகுமார் அவர்களின் தூரநோக்கின் ஓர் அங்கமாக இன்றையதினம் இவர்களுக்கு இவை வழங்கிவைக்கப்பட்டது, எதிர்வரும் காலங்களில் மேலும் பலர் இதனூடாக இனங்காணப்பட்டு அவர்களது வாழ்வாரத்தை உயர்த்தும் வண்ணம் கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதியின் பிரஜா சக்தியின் தலைவர் என்ற முறையில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை சிறப்பாக பயன்படுத்தி அவரின் தொகுதிக்குட்பட்ட அனைத்து மக்களின் நலன் சார்ந்து செயற்பட்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மேற்கொள்ள முடிகின்ற அத்தனை நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தி அவர்களை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கும் வண்ணம் மாற்றியமைப்பதே தனது நோக்கம் என எஸ். ஆனந்தகுமார் தெரிவித்தார்.
இதன் ஒரு கட்டமாக, கடந்த ஒக்டோபர் மாதம் 16ம் திகதி கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதியின் பிரஜா சக்தியின் தலைவர் எஸ். ஆனந்தகுமார் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஜெம்பட்டா வீதியியை சேர்ந்த 03 பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டப்பட்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.
























































