கொழும்பு, அத்துருரிய பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பிரபல ஒளிப்பதிவாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பிரபல இசைக்கலைஞர் விக்டர் ரத்நாயக்கவின் தம்பியான 65 வயதான ரத்நாயக்க ஆராச்சிலாகே டான் ஃபிரீமன் (Rathnayake Arachchilage Don Freeman) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தொழில் ரீதியாக ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த அவர், வீட்டில் தனியாக வசித்து வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் பிற்பகல், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் கண்டெடுக்கப்பட்ட வேளையில், அவர் இறந்து சுமார் இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில், தலங்கம பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் சமாதான நீதவானுமான திருமதி பிரேமலதா அபேவர்தன விசாரணைகளை மேற்கொண்டார்.
மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், அத்துருகிரிய பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.






















































