அம்பாறை மல்வத்தை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!
அம்பாறை மாவட்டம், மல்வத்தை பிரதான வீதியில் நேற்று (20) வெள்ளிக்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

























































