நிந்தவூர் கடலில் மூவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர் – ஒருவரின் சடலம் மீட்பு!
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடலில் நேற்று (20) நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.

இதன்போது, காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

























































