Tuesday, November 24, 2026
  • About
  • Privacy Policy
TamilPlus
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்
  • காலநிலை
  • விளையாட்டு
  • சினிமா
  • லைஃப்ஸ்டைல்
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இலங்கை

அநுரவின் ஆட்சியில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்குமா? கந்தையா பாஸ்கரன் கருத்து!

Thuva Stela by Thuva Stela
November 24, 2026
in இலங்கை
0
Will Tamils ​​receive a permanent political solution

Will Tamils ​​receive a permanent political solution

0
SHARES
0
VIEWS
Share on Facebook
Share on Twitter

தற்போதைய தமிழ் அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைக் களைந்து, புதிய மாற்றத்தை உருவாக்கப் புதிய இளைய தலைமுறை அரசியலுக்கு வருவது அவசியம் என கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

வலைத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

Karthigai Deepam and the President’s Birthday

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

November 24, 2026
Good news for farmers

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விவசாயத் துறையில் பாரிய மாற்றம்!

November 24, 2026

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”தமிழ் அரசியலில் பல தசாப்தங்களாக நீடிக்கும் உட்கட்சி முரண்பாடுகள் இனத்தையே பாரதூரமான நிலைக்குத் தள்ளியுள்ளன. எனவே, பழைய அரசியல் பாதைகளில் பயணிக்காத புதிய இளைய தலைமுறையால் மட்டுமே புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க முடியும். சில வேளைகளில் தாயகத்தில் இயங்கும் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க வேண்டி வந்தாலும், சிங்கள அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது அவசியமாகிறது. ஆனால் தான் அரசியலுக்குள் வந்தால், அவர் தனித்துவமான ஓர் அரசியலையே முன்னெடுக்க முடியும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் தேசிய மக்கள் சக்திக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.

பாரம்பரிய தமிழ் அரசியல் கட்சிகள் மீது ஏற்பட்ட வெறுப்பும், மக்களைச் சரியான முறையில் வழிநடத்தத் தவறியமையுமே இதற்குக் காரணமாகும்.

போர் முடிந்து 17 ஆண்டுகளுக்குள்ளேயே தமது மனநிலையை மாற்றிக்கொண்டுள்ள மக்கள், புதிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், தமிழர்களின் பூர்வீக நிலம், உரிமைகள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் போன்ற விடயங்களில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து மக்கள் அவதானமாக உள்ளனர். மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தின் சித்தாந்த அரசியலில் இருந்து வெளிவந்து, பௌத்த, பௌதிக நாடாகப் பிரகடனம் செய்வதே அவர்களின் கொள்கையாக இருப்பதால், ஆட்சிகள் மாறினாலும் இந்தத் தத்துவார்த்த அடிப்படை மாறப்போவதில்லை.

வடக்கு மாகாண சபைக்கு மக்கள் தம்மைத் தெரிவு செய்தால், மக்களுக்கு விசுவாசமாக இருப்பதுடன் இந்த மண்ணுக்காக உயிர்நீத்தவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

எனினும், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காகத் தமிழர் தரப்பு ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். தாயகத்தில் ஏற்பட்டுள்ள வேலையின்மை காரணமாக அதிகளவான இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இதனைத் தடுக்க வடக்கு-கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும். மேலும், புதிய முதலீடுகளை ஈர்த்து, வெளிநாட்டு நிறுவனங்களை வரவழைத்து, உள்ளூர் வளங்களைப் பயன்படுத்திப் பாரிய பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

இதன்படி இளைய தலைமுறை அரசியலுக்கு வரும்போதே இவ்வாறான பொருளாதார மாற்றங்களைச் சாத்தியப்படுத்த முடியும்” என கூறியுள்ளார்.

Tags: baskaranஇலங்கை
Previous Post

இன்று 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

Next Post

ஈழப் போராளிகளுக்கு எதிரான எம்.ஜி.ஆரின் அதிரடி நடவடிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய சம்பவம்!

RelatedPosts

Karthigai Deepam and the President’s Birthday
இலங்கை

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

November 24, 2026
Good news for farmers
இலங்கை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விவசாயத் துறையில் பாரிய மாற்றம்!

November 24, 2026
Tragedy strikes a woman who left her home
இலங்கை

அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!

November 24, 2026
Attention, those planning to purchase land, a house
இலங்கை

காணி, வீடு, வாகனம் வாங்குவோர் அவதானம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 24, 2026
Good news for Sri Lankans
இலங்கை

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தாய்லாந்து பிரதிப் பிரதமருடன் ஹரிணி முக்கிய சந்திப்பு!

November 24, 2026
MGR’s decisive action against Eelam militants
இந்தியா

ஈழப் போராளிகளுக்கு எதிரான எம்.ஜி.ஆரின் அதிரடி நடவடிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய சம்பவம்!

November 24, 2026
Next Post
MGR’s decisive action against Eelam militants

ஈழப் போராளிகளுக்கு எதிரான எம்.ஜி.ஆரின் அதிரடி நடவடிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

President Anura Kumara Dissanayake celebrates

இன்று 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

21 minutes ago
இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

2 hours ago
Attention, those planning to purchase land, a house

காணி, வீடு, வாகனம் வாங்குவோர் அவதானம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

20 minutes ago
Karthigai Deepam and the President’s Birthday

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

2 minutes ago

POPULAR NEWS

  • 23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

    0 shares
    Share 0 Tweet 0
  • About
  • Privacy Policy

© 2026 TamilPlus

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்

© 2026 TamilPlus