Tuesday, November 24, 2026
  • About
  • Privacy Policy
TamilPlus
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்
  • காலநிலை
  • விளையாட்டு
  • சினிமா
  • லைஃப்ஸ்டைல்
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இலங்கை

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தாய்லாந்து பிரதிப் பிரதமருடன் ஹரிணி முக்கிய சந்திப்பு!

Thuva Stela by Thuva Stela
November 24, 2026
in இலங்கை
0
Good news for Sri Lankans

Good news for Sri Lankans

0
SHARES
0
VIEWS
Share on Facebook
Share on Twitter

தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசாக் புவாங்கெட்கியோ (Sihasak Phuangketkeow) தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 நவம்பர் 23ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை (FTA) மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும், இரு நாட்டு வர்த்தக சமூகத்தினருக்கும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

Related posts

Karthigai Deepam and the President’s Birthday

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

November 24, 2026
Good news for farmers

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விவசாயத் துறையில் பாரிய மாற்றம்!

November 24, 2026

இலங்கையின் சாதாரண கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 30 நாள் காலப்பகுதிக்கு விசா இன்றித் தாய்லாந்துக்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், 2026 நவம்பர் 22ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் பரிமாற்றத் திட்டங்களையும் இலகுபடுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியமான நகர்வாகும் என இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவித்தல், சுற்றுலாத் தொழில்துறையுடன் தொடர்புடைய பங்குடைமைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இந்து சமுத்திரத்தின் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் தனித்துவமான புவியியல் அமைவிடத்தையும், முக்கிய கடல்சார் மற்றும் துறைமுக மையமாக அதன் வகிபாகத்தையும் கருத்தில் கொண்டு, கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

குறிப்பாக உணவுப் பதப்படுத்தல், தொழில்நுட்பப் பரிமாற்றம், நிபுணத்துவ அறிவுப் பகிர்வு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி, விவசாயத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

2027 ஜனவரியில் நடைபெறவுள்ள எக்ஸ்போ ஸ்ரீலங்கா (Expo Sri Lanka) கண்காட்சியில் பங்கேற்று, இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது அழைப்பு விடுத்தார்.

பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் மூலம் பிராந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இரு தரப்பினரும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்காகத் தாய்லாந்து அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்சார் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தினார்.

இந்நிகழ்வில், இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் Paitoon Mahapannaporn உள்ளிட்ட தூதுக்குழுவினரும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Tags: hariniஇலங்கை
Previous Post

ஈழப் போராளிகளுக்கு எதிரான எம்.ஜி.ஆரின் அதிரடி நடவடிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய சம்பவம்!

Next Post

காணி, வீடு, வாகனம் வாங்குவோர் அவதானம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

RelatedPosts

Karthigai Deepam and the President’s Birthday
இலங்கை

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

November 24, 2026
Good news for farmers
இலங்கை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விவசாயத் துறையில் பாரிய மாற்றம்!

November 24, 2026
Tragedy strikes a woman who left her home
இலங்கை

அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!

November 24, 2026
Attention, those planning to purchase land, a house
இலங்கை

காணி, வீடு, வாகனம் வாங்குவோர் அவதானம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 24, 2026
MGR’s decisive action against Eelam militants
இந்தியா

ஈழப் போராளிகளுக்கு எதிரான எம்.ஜி.ஆரின் அதிரடி நடவடிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய சம்பவம்!

November 24, 2026
Will Tamils ​​receive a permanent political solution
இலங்கை

அநுரவின் ஆட்சியில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்குமா? கந்தையா பாஸ்கரன் கருத்து!

November 24, 2026
Next Post
Attention, those planning to purchase land, a house

காணி, வீடு, வாகனம் வாங்குவோர் அவதானம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

1 hour ago
சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

2 hours ago
யாழில் கழுசடைகள் வீடு புகுந்து வெறியாட்டம்-பதறிய குடும்பம்

யாழில் கழுசடைகள் வீடு புகுந்து வெறியாட்டம்-பதறிய குடும்பம்

1 hour ago
பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

3 hours ago

POPULAR NEWS

  • 23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

    0 shares
    Share 0 Tweet 0
  • About
  • Privacy Policy

© 2026 TamilPlus

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்

© 2026 TamilPlus