Tuesday, November 24, 2026
  • About
  • Privacy Policy
TamilPlus
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்
  • காலநிலை
  • விளையாட்டு
  • சினிமா
  • லைஃப்ஸ்டைல்
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இலங்கை

காணி, வீடு, வாகனம் வாங்குவோர் அவதானம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Thuva Stela by Thuva Stela
November 24, 2026
in இலங்கை
0
Attention, those planning to purchase land, a house

Attention, those planning to purchase land, a house

0
SHARES
2
VIEWS
Share on Facebook
Share on Twitter

காணிகள், சொத்துகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை உரிய கொடுப்பனவு முறைகளுக்கு அப்பால் பணமாகச் செலுத்தினால், நடைமுறையிலுள்ள வரி விதிகளின் கீழ் அதிக வரிப் பொறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு முறைகளுக்கு அப்பால், ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பணமாகச் செலுத்தி மேற்கொள்ளப்படும் வணிகச் செலவுகள், வரிக்குட்பட்ட வருமானத்தைக் கணக்கிடும்போது கழிக்கக்கூடிய செலவுகளாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Karthigai Deepam and the President’s Birthday

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

November 24, 2026
Good news for farmers

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விவசாயத் துறையில் பாரிய மாற்றம்!

November 24, 2026

உதாரணமாக, ஒரு நிறுவனம் தனது செலவுக்காக 10 இலட்சம் ரூபாயைப் பணமாகச் செலுத்தினால், அந்தத் தொகையை வரிக் கழிவாகக் கருத முடியாது. இதனால், குறித்த நிறுவனத்தின் வரிக்குட்பட்ட இலாபம் 10 இலட்சம் ரூபாயால் அதிகரிக்கும். இதன்படி, 30 சதவீத நிறுவன வருமான வரி வீதத்துக்கு உட்பட்ட வணிக நிறுவனம், மேலதிகமாக மூன்று இலட்சம் ரூபாய் வரியைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். காணி விற்பனை உள்ளிட்ட சொத்துப் பரிவர்த்தனைகளில் கிடைக்கும் வரிக்குட்பட்ட இலாபத்தைக் கணக்கிடும்போதும் இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக, ஒருவர் 90 இலட்சம் ரூபாய்க்குக் காணியொன்றைக் கொள்வனவு செய்து, பின்னர் அதனை ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தால், பொதுவாக அவரது இலாபம் 10 இலட்சம் ரூபாயாகக் கணக்கிடப்படும்.

எனினும், உரிய கொடுப்பனவு நடைமுறைகளை மீறி ஆரம்பக் கொள்வனவு பணமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், 90 இலட்சம் ரூபாய் கொள்வனவுச் செலவை வரிக் கணக்கீட்டுக்காக ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில், உண்மையான இலாபமான 10 இலட்சம் ரூபாய்க்குப் பதிலாக, முழுமையான ஒரு கோடி ரூபாய் விற்பனைத் தொகையின் அடிப்படையில் வரி கணக்கிடப்படக்கூடிய நிலை ஏற்படும் என அந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார். முறையான நிதிப் பரிவர்த்தனை வழிகளை ஊக்குவித்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் முறைசாரா நிதிச் செயற்பாடுகளை ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் கொண்டுவருதல் ஆகிய நோக்கங்களுக்காகவே இக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags: taxஇலங்கை
Previous Post

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தாய்லாந்து பிரதிப் பிரதமருடன் ஹரிணி முக்கிய சந்திப்பு!

Next Post

அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!

RelatedPosts

Karthigai Deepam and the President’s Birthday
இலங்கை

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

November 24, 2026
Good news for farmers
இலங்கை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விவசாயத் துறையில் பாரிய மாற்றம்!

November 24, 2026
Tragedy strikes a woman who left her home
இலங்கை

அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!

November 24, 2026
Good news for Sri Lankans
இலங்கை

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தாய்லாந்து பிரதிப் பிரதமருடன் ஹரிணி முக்கிய சந்திப்பு!

November 24, 2026
MGR’s decisive action against Eelam militants
இந்தியா

ஈழப் போராளிகளுக்கு எதிரான எம்.ஜி.ஆரின் அதிரடி நடவடிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய சம்பவம்!

November 24, 2026
Will Tamils ​​receive a permanent political solution
இலங்கை

அநுரவின் ஆட்சியில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்குமா? கந்தையா பாஸ்கரன் கருத்து!

November 24, 2026
Next Post
Tragedy strikes a woman who left her home

அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

Will Tamils ​​receive a permanent political solution

அநுரவின் ஆட்சியில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்குமா? கந்தையா பாஸ்கரன் கருத்து!

21 minutes ago
MGR’s decisive action against Eelam militants

ஈழப் போராளிகளுக்கு எதிரான எம்.ஜி.ஆரின் அதிரடி நடவடிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய சம்பவம்!

21 minutes ago
spectacular sight awaits the people of Sri Lanka

இலங்கை மக்களுக்கு இன்று வானில் காத்திருக்கும் அற்புதக் காட்சி!

22 minutes ago
இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

30 minutes ago

POPULAR NEWS

  • 23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

    0 shares
    Share 0 Tweet 0
  • About
  • Privacy Policy

© 2026 TamilPlus

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்

© 2026 TamilPlus