Tuesday, November 24, 2026
  • About
  • Advertise
  • Careers
  • Contact
TamilPlus
  • Home
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இலங்கை

பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

Mayu 3 by Mayu 3
November 24, 2026
in இலங்கை
0
0
SHARES
30
VIEWS
Share on Facebook
Share on Twitter

காதலனின் பணத் தேவைக்காக சொந்தத் தாயின் 8.5 பவுன் தாலிக்கொடியைத் திருடி ஈடு வைத்து விட்டு, உறவுக்கார பெண் ஒருவரை திருட்டு வலையில் சிக்க வைத்து நாடகமாடிய 22 வயதுடைய யுவதி ஒருவர் தொடர்பில் வௌியான தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் 28-ஆம் திகதி தமது வீட்டிலிருந்த 8.5 பவுன் தாலிக்கொடி காணாமல் போனதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

Related posts

23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

November 24, 2026

இதையடுத்து, தமது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவுக்கார  பெண் ஒருவரே இதனைத் திருடியிருக்கலாம் என வீட்டார் சந்தேகத்தைக் கிளப்பினர்.

அதன் அடிப்படையில் குறித்த உறவுக்கார பெண்ணைக் கைது செய்த பொலிஸார், அவரிடம் தீவிர விசாரணைகளை நடத்தினர்.

எனினும் காணாமல் போனதாக கூறப்பட்ட நகை எதுவும் கிடைக்காத நிலையில், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்தனர்.

பின்னர் அவர் பிணையில் வெளிவந்தார். அப்பாவி உறவுக்கார பெண் சிறை சென்ற போதிலும், 4 மாதங்களை கடந்தும் உண்மை வௌிவரவில்லை.


​
இந்த விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இதற்கிடையில், குறித்த பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவிற்குப் புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் பொலிஸ் குழுவினர்  நான்கு மாதங்களாக முடங்கியிருந்த இந்த பழைய வழக்கை மீண்டும் தூசி தட்டி தீவிர விசாரணையில் இறங்கினர்.

சந்தேகத்தின் அடிப்படையில், வீட்டின் உரிமையாளரின் மகளான தனியார் வங்கியில் பணியாற்றும் 22 வயது யுவதியிடமும் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

நீதிமன்ற அனுமதியுடன் குறித்த யுவதியின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்ற பொலிஸார், வங்கிகளில் விசாரணை நடத்தினர்.

வங்கி ஆவணங்களை ஆய்வு செய்த பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த ஜூன் 28-ஆம் திகதி தாயின் தாலிக்கொடி திருட்டுப் போன நிலையில், இரண்டு நாட்களில் அதாவது ஜூன் 30-ஆம் திகதி அதே யுவதி தனது அடையாள அட்டையைப் பயன்படுத்தித் தனியார் வங்கி ஒன்றில் அதனை அடகு வைத்து 14 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்து, உடனடியாக குறித்த யுவதியை நேற்று (23) பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தின்  முழுப் பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்தது.

தமது காதலனின் அவசர பணத் தேவைக்காகவே தாயின் தாலிக்கொடியைத் தாம் திருடி 14 இலட்சம் ரூபாய்க்கு வங்கியில் அடகு வைத்ததாகவும், அன்றைய தினமே காந்தி பூங்காவில் வைத்து காதலனிடம் அந்த 14 இலட்சம் ரூபாயைக் கைமாற்றியதாகவும் கைதான யுவதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் இந்த விவகாரம் வீட்டாருக்கு தெரியாமல் இருப்பதற்காக உண்மையை மறைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த யுவதியின் காதலன் தொடர்பிலும் அவருக்கும் இந்த திருட்டுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட யுவதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 7-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: இலங்கைமட்டக்களப்பு
Next Post

23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

RelatedPosts

23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்
இலங்கை

23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

November 24, 2026
Next Post
23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

4 minutes ago
பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

24 minutes ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • இலங்கை

BROWSE BY TOPICS

இலங்கை மட்டக்களப்பு

POPULAR NEWS

  • பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

    பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

    0 shares
    Share 0 Tweet 0
  • 23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    0 shares
    Share 0 Tweet 0
  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2026 TamilPlus

No Result
View All Result
  • Home

© 2026 TamilPlus