பாடசாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் இணைக்கப்படும்போது மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவது கட்டாயம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்க 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூல பாடசாலைகளின் பற்றாக்குறையால் மாணவர் வருகை குறைவதும், இடைவிலகல் அதிகரிப்பதும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, தேவையான பகுதிகளில் தமிழ் மொழிமூல வகுப்புகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை மாணவர்களின் வருகையை அதிகரிக்க போசாக்குத் திட்டங்கள், பாடசாலை பாதுகாப்பு, பிறப்புச் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கான ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்தல், அதிபர் இடமாற்றம் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த விடயங்கள் நேற்று (23) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட கல்வி உபகுழுக் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.











