Tuesday, November 24, 2026
  • About
  • Privacy Policy
TamilPlus
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்
  • காலநிலை
  • விளையாட்டு
  • சினிமா
  • லைஃப்ஸ்டைல்
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இலங்கை

கொலைச் சதித் திட்டம் தொடர்பான விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

Thuva Stela by Thuva Stela
November 24, 2026
in இலங்கை
0
Shocking details emerge from the investigation

Shocking details emerge from the investigation

0
SHARES
1
VIEWS
Share on Facebook
Share on Twitter

ஹொரண, அங்குருவாதோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், T56 மற்றும் M60 ரக தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுத தளபாடங்கள் பேலியகொட குற்றத் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி, ஹொரண – அங்குருவாதோட்டை பகுதியில் கொலையொன்றை மேற்கொள்வதற்குத் தயாராகவிருந்த சந்தேகநபர் ஒருவர் பேலியகொட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

Karthigai Deepam and the President’s Birthday

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

November 24, 2026
Good news for farmers

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விவசாயத் துறையில் பாரிய மாற்றம்!

November 24, 2026

அவரிடமிருந்து T56 ரக துப்பாக்கியொன்று, மகசீன் ஒன்று மற்றும் 16 தோட்டாக்கள் என்பன அப்போது கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய, நேற்றைய தினம் அங்குருவாதோட்டை பகுதியில் மீண்டும் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, 90 T56 ரக தோட்டாக்கள், 23 M60 ரக தோட்டாக்கள் மற்றும் கைவிலங்கு ஜோடியொன்று என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

M60 என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இயந்திரத் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 7.62 x 51mm (NATO) ரக தோட்டாக்களாகும். இலங்கையில் M60 ரக துப்பாக்கிகள் முப்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேலியகொட குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சமிந்த தர்மரத்னவின் நேரடி மேற்பார்வையில், பிரிவு 03இன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெதும் அஞ்சன தலைமையிலான குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் மேலதிக விசாரணைகளில், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘கொஸ் மல்லி’ மற்றும் ‘இரத்மலானை ரசல் ஸ்மித்’ ஆகியோருக்கு இந்தச் சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Tags: crimeஇலங்கை
Previous Post

இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

Next Post

இலங்கை மக்களுக்கு இன்று வானில் காத்திருக்கும் அற்புதக் காட்சி!

RelatedPosts

Karthigai Deepam and the President’s Birthday
இலங்கை

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

November 24, 2026
Good news for farmers
இலங்கை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விவசாயத் துறையில் பாரிய மாற்றம்!

November 24, 2026
Tragedy strikes a woman who left her home
இலங்கை

அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!

November 24, 2026
Attention, those planning to purchase land, a house
இலங்கை

காணி, வீடு, வாகனம் வாங்குவோர் அவதானம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 24, 2026
Good news for Sri Lankans
இலங்கை

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தாய்லாந்து பிரதிப் பிரதமருடன் ஹரிணி முக்கிய சந்திப்பு!

November 24, 2026
MGR’s decisive action against Eelam militants
இந்தியா

ஈழப் போராளிகளுக்கு எதிரான எம்.ஜி.ஆரின் அதிரடி நடவடிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய சம்பவம்!

November 24, 2026
Next Post
spectacular sight awaits the people of Sri Lanka

இலங்கை மக்களுக்கு இன்று வானில் காத்திருக்கும் அற்புதக் காட்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

யாழில் கழுசடைகள் வீடு புகுந்து வெறியாட்டம்-பதறிய குடும்பம்

யாழில் கழுசடைகள் வீடு புகுந்து வெறியாட்டம்-பதறிய குடும்பம்

1 hour ago
இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

2 hours ago
MGR’s decisive action against Eelam militants

ஈழப் போராளிகளுக்கு எதிரான எம்.ஜி.ஆரின் அதிரடி நடவடிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய சம்பவம்!

21 minutes ago
spectacular sight awaits the people of Sri Lanka

இலங்கை மக்களுக்கு இன்று வானில் காத்திருக்கும் அற்புதக் காட்சி!

22 minutes ago

POPULAR NEWS

  • 23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

    0 shares
    Share 0 Tweet 0
  • About
  • Privacy Policy

© 2026 TamilPlus

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்

© 2026 TamilPlus