நாடாளுமன்றம் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை 98 வாக்குகள் பெரும்பான்மையுடன் அங்கீகரித்தது; இதில் 157 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். வாக்கெடுப்பின் போது நான்கு உறுப்பினர்கள் அவையில் இருக்கவில்லை.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
இதேவேளை, வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலித் ஜயவீர, நயன வசலதிலக, காதர் மஸ்தான் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் அடுத்த கட்டமாகக் குழுநிலை விவாதங்கள் நடைபெறும்.
இதன்போது அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், அரச செலவினங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும்.
குழுநிலை விவாதங்களின் பின்னர் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும். அதில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதற்கான இறுதி நாடாளுமன்ற அங்கீகாரம் கிடைக்கும்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த நவம்பர் 12ஆம் திகதி 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் ஏழு நாட்கள் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதியில், நேற்று (20) மாலை 6.50 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது வரவு செலவுத் திட்டம் இதுவென்பதுடன், இலங்கையின் 81ஆவது வரவு செலவுத் திட்டமாகவும் இது அமைந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலித் ஜயவீர, நயன வசலதிலக, காதர் மஸ்தான் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அவையில் இல்லாதவர்களில் அடங்குவர்.

























































