ஓமந்தை- கொந்தக்காரன்குளம் பகுதியில் காட்டுக்குச் சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா- ஒமந்தை, கொந்தக்காரன்குளத்தைச் சேர்ந்த து.நாகராசா (வயத 60) என்பவர் கடந்த புதன்கிழமை காலை காட்டுக்குச் சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை என உறவினர்கள் ஒமந்தை பொலஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அத்துடன், அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் காணாமல் போன குறித்த நபர் அந்தப் பகுதியில் இருந்து இன்று (21.11.2026) சடலமாக மீட்கப்பட்டார்.
















































