இலங்கை பாடசாலை 3ம் தவணை விடுமுறை 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள 2026ம் ஆண்டு பாடசாலை தவணை அட்டவணையின்படி, 3ம் தவணையின் 2ம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி வெள்ளிக்கிழமை முடிவடைகிறது.
3ம் தவணை விடுமுறை ஆரம்பம்
சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகள்
டிசம்பர் 5ம் திகதி சனிக்கிழமை முதல் விடுமுறை ஆரம்பம்
முஸ்லிம் பாடசாலைகள்
டிசம்பர் 5ம் திகதி சனிக்கிழமை முதல் விடுமுறை ஆரம்பம்
இந்த விடுமுறை காலம் வழக்கத்தை விட நீண்ட நாட்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
காரணம் என்ன
2027ம் ஆண்டு ஜனவரியில் புதிய கல்வியாண்டை தொடங்குவதற்கு ஏதுவாக, 2026ம் ஆண்டின் இறுதி விடுமுறை நீண்ட நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 2027ம் ஆண்டு முதல் பாடசாலை தவணைகள் மற்றும் பொது பரீட்சைகள் அனைத்தும் வழக்கமான கால அட்டவணைப்படி நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கவனிக்க வேண்டிய விடயம்
கபொத சாதாரண தர பரீட்சை 2026 டிசம்பர் மாதம் திட்டமிட்டபடி நடைபெறும். எனவே பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விடுமுறை காலத்திலும் பரீட்சை தொடர்பான நடவடிக்கைகள் இருக்கும்.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்
2027ம் ஆண்டு புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஜனவரி மாதம் மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தியோகபூர்வ திகதி கல்வி அமைச்சால் பின்னர் அறிவிக்கப்படும்.
உங்கள் பிள்ளையின் பாடசாலை எது. விடுமுறைக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள். கமெண்டில் சொல்லுங்கள்.
















































