தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காகப் பொதுமக்கள் திரள் நிதி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணற்ற விமர்சனங்கள், மற்றும் அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும், மக்கள் இயக்கம் மக்களின் ஆதரவுடனேயே இயங்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், இந்த முறை தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கும் வழமைபோன்று திரள் நிதி வழங்கி, தமது பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்துமாறு மக்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.
ஈழத்து அரசியல் வாதிகள் ரகசியமாக புலம் பெயர் சந்தையில் தியாகங்களை விற்று பணத்தை பெறுகிறார்கள்.
தமிழக அரசியல் வாதிகள் பகிரங்கமாக கேட்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
















































