ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அசுப யோகம் உருவாகவுள்ளது. அது தான் விஷ யோகம்.
இந்த விஷ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுவும் நிதி மற்றும் தொழிலில் விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்போது மீன ராசியில் உருவாகும் விஷ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரித்து, நிதி நிலைமை மோசமடையலாம். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மன அமைதிக்கு தியானத்தையும், யோகா பயிற்சியையும் மேற்கொள்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்யும் முன் கவனமாக சிந்திக்க வேண்டும். முடிந்தால் நம்பகமான ஒருவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வயிறு தொடர்பான பிரச்சனைகளால் சிரமப்படும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க ஹோட்டல் உணவுகளை தவிர்த்திடுங்கள். மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கலாம். விஷ யோகத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வது நல்லது.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை குறையும். வேலைகளில் தடைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம், சோகம் மற்றும் தேவையற்ற கவலை ஆகியவை உங்கள் அன்றாட வழக்கத்தைப் பாதிக்கக்கூடும். எந்தவொரு நிதி தொடர்பான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். அவசர முடிவுகள் இழப்புகளுக்கு வழிவகுக்கும். இந்த நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கிய முடிவுகளை இக்காலத்தில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். விஷ யோகத்தின் மோசமான விளைவை தவிர்க்க கருப்பு எள் தானம் செய்வது நல்லது.





















































