கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (21) இரவு இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் வந்து குறித்த சடலத்தை அவ்விடத்தில் வீசிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
















































