பதுளை ஆற்றில் நீராடச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹப்புவலகும்புர கிராம சேவகர் பிரிவில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகை தந்த கஹகொல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞரே இன்று (19) இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
உடுவர STF முகாமுக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பதுளை ஆற்றில் நீராடச் சென்றபோதே அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகளுக்கு பொதுமக்களின் உதவியும் கோரப்பட்டுள்ளதுடன், தேடுதல் நடவடிக்கைகளில் உதவ விரும்புவோர் உரிய தரப்பினருடன் இணைந்து செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது




















































