சவூதி அரேபியாவில் தண்டனைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (17-11-2026) வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“அனோஜன் விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.குறிப்பாக, வெளிவிவகார அமைச்சு இப்போது வரை அந்த விடயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடனேயே செயற்பட்டு வருகின்றது.
அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மேலும் பல இராஜதந்திர மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.









































