இந்தியப் பெருங்கடலில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
இந்தியப் பெருங்கடலில் மொரீஷியஸ் – ரீயூனியன் தீவுப் பகுதிக்கு அருகில் இன்று பிற்பகல் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இலங்கை நேரப்படி பிற்பகல் 4.36 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் உள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில், இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், நாட்டின் அனைத்து கரையோரப் பகுதிகளும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சுனாமி எச்சரிக்கை தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பொதுமக்கள் நம்பவோ, பகிரவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.












