அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவுகளை பொலிஸார் ஆய்வு செய்து வருவதுடன், இதுவரை 100ற்கும் மேற்பட்ட திருத்தப்படாத காணொளிப் பதிவுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளிகளை ஆய்வு செய்து, அதன் கண்டறிதல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுமேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு பொலிஸ் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ருவன்வெலிசாயவுக்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

































