பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன அனுராதபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதன அனுராதபுரம் காவல் நிலையத்துக்கு இன்று அழைக்கப்பட்டார்.
அதன்படி, விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் ருவன்வெலிசாய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை வழிநடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தத் தவறியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது












































