உத்தரகாண்டில் 100 மீட்டர் ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் டெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் 100 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
குலார் பஜார் பகுதிக்கு அருகில் உள்ள செங்குத்தான மலைப்பாதையில் உள்ள பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கிற்குள் பேருந்து கவிழ்ந்தது, இதில் பல பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தின் போது பேருந்திற்குள் சுமார் 30 முதல் 35 பயணிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது.பேருந்து விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் பெரிய அளவிலான மீட்பு பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு இருந்தன.
கிட்டத்தட்ட 20 பயணிகள் காயங்களுடன் பள்ளத்தாக்கில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு விட்டனரா என்று உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்து தேடுதல் பணியானது நடைபெற்று வருகிறது.







































