இலங்கை அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருகோணமலை – சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் நேற்று முன்தினம் (14) சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் காண்டீபன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
காண்டீபன் கருத்துப்படி, தற்போது மாவீரர் தினத்திற்காக நாங்கள் செய்த ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினர் கேட்டறிந்தனர்.காவல்துறையினரின் இந்த சுமூகமான நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கை கொடுக்கக்கூடியதாக உள்ளது.
இந்த நம்பிக்கையின் மூலமாக சிதைக்கபட்டுள்ள மாவீரர் இல்லங்கள் மீள கட்டியெழுப்பப்படுவதற்கு இவ்வாறான செயற்பாடுகள் வழிவகுக்க வேண்டும்.
மேலும் அரசாங்கத்தால் சிதைக்கப்பட்ட இந்த மாவீரர் கட்டிடங்களை மீள கட்டியெடுப்ப அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.


































