• Latest
  • Trending
  • All
மஞ்சள்  விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான காரணம்

மஞ்சள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான காரணம்

November 15, 2026
யாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

யாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

November 15, 2026
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

November 15, 2026
காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி அமைச்சர் வெளியிட்ட தகவல்

காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி அமைச்சர் வெளியிட்ட தகவல்

November 15, 2026
இலங்கை காட்டுக்குள் குழந்தையுடன் சிறுமி-வெளியான திடுக்கிடும் தகவல்கள்

இலங்கை காட்டுக்குள் குழந்தையுடன் சிறுமி-வெளியான திடுக்கிடும் தகவல்கள்

November 15, 2026
இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

November 15, 2026
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

November 15, 2026
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

November 14, 2026
  • About
  • Blog
  • Contact
  • Gallery
  • Home
  • Sample Page
Sunday, November 15, 2026
  • Login
TamilPlus
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result

மஞ்சள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான காரணம்

மஞ்சள்  விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான காரணம்

உலகச் சந்தையில் எரிவாயு விலை, கப்பல் கட்டணம், காப்புறுதிக் கட்டணம் மற்றும் நாணய மாற்று விகிதங்கள் அதிகரித்தமையினால் ஏற்பட்டுள்ள செலவினங்களை ஈடுசெய்வதற்காகவே லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு விலையை அதிகரிக்கத் தீர்மானித்ததாக அந்நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த விலை திருத்தத்தின் மூலம் நிறுவனம் மேலதிக இலாபத்தை எதிர்பார்க்கவில்லை எனவும், நிறுவனத்தின் செலவினங்களை ஈடுசெய்வதற்காகக் கணக்கிடப்பட்ட விலை மட்டுமே இதுவெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

RelatedPosts

யாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையைத் தீர்மானிப்பதில் பல முக்கிய காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாகச் சுட்டிக்காட்டிய அவர், சவூதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்தினால் ஒவ்வொரு மாதமும் ஆரம்பத்தில் வெளியிடப்படும் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை அவற்றில் பிரதான காரணியாக அமைவதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக உலகச் சந்தையில் எரிவாயு விலை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், அந்த விலை அதிகரிப்பினால் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றிற்கு 706 ரூபா மேலதிகச் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக, எரிவாயு போக்குவரத்திற்காகச் செலவிடப்படும் கப்பல் கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணங்களும் யுத்த சூழ்நிலை காரணமாக அதிகரித்துள்ளன.

இதன் மூலம் சிலிண்டர் ஒன்றிற்கு மேலும் 417 ரூபா செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக 299 ரூபா மேலதிகச் செலவை ஏற்க நேரிட்டுள்ளமையும் இதற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.

இந்தச் செலவின அதிகரிப்புகளுக்கு மேலதிகமாக, குறித்த விலை திருத்தத்தில் 18 சதவீத வட் (VAT) வரியிலிருந்து 256 ரூபா தொகையும் உள்ளடங்குவதாகத் தெரிவித்த அவர், வங்கிக் கடன்கள் மற்றும் நாணயக் கடிதங்கள் (LC) ஊடாக எரிவாயுவைக் கொள்வனவு செய்யும் போது நிறுவனத்திற்கு ஏற்படும் நிதிச் செலவாக மேலும் 90 ரூபா சேர்க்கப்படுவதாகவும் விளக்கமளித்தார்.

அதற்கமைய, இந்த அனைத்துச் செலவினங்களையும் கூட்டும்போது 1,769 ரூபா விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியிருந்த போதிலும், நிறுவனம் சிலிண்டர் ஒன்றின் விலையை 1,775 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

நிறுவனம் இலாபம் ஈட்டும் நோக்கிலோ அல்லது நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கிலோ இந்த விலை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை எனவும் நளிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் என்ற வகையில், பங்குதாரர்களுக்கும் கடன் வழங்கியுள்ள வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கும் நிறுவனம் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளதால், நஷ்டமடையும் விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்யும் சாத்தியமில்லை எனவும் அவர் கூறினார்.

எனவே, தற்போதைய விலை திருத்தமானது இலாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டதல்ல எனவும், நிறுவனத்தின் செலவினங்களை ஈடுசெய்வதற்காகத் தீர்மானிக்கப்பட்ட விலை எனவும், உலகச் சந்தையில் நிலவும் யுத்த சூழ்நிலை உள்ளிட்ட காரணிகளாலேயே இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள நேரிட்டதாகவும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: இலங்கைஎரிவாயுமஞ்சள்விலை
Previous Post

இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Next Post

இலங்கை காட்டுக்குள் குழந்தையுடன் சிறுமி-வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Related Posts

யாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

யாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

by மயூரன்
November 15, 2026
0

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வைத்திய பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமரன், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

by மயூரன்
November 15, 2026
0

அரச ஊழியர்களின் சம்பள வழங்கலுக்காக மாத்திரம் தற்போது வருடமொன்றுக்கு சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி அமைச்சர் வெளியிட்ட தகவல்

காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி அமைச்சர் வெளியிட்ட தகவல்

by மயூரன்
November 15, 2026
0

நக்கிள்ஸ் மலைத் தொடர் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 15 வயது சிறுமி மற்றும் பச்சிளம் குழந்தையின் எதிர்கால நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அரசாங்க தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டிய...

இலங்கை காட்டுக்குள் குழந்தையுடன் சிறுமி-வெளியான திடுக்கிடும் தகவல்கள்

இலங்கை காட்டுக்குள் குழந்தையுடன் சிறுமி-வெளியான திடுக்கிடும் தகவல்கள்

by மயூரன்
November 15, 2026
0

ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி ஒருவர் இரண்டு மாத கைக்குழந்தை ஒன்றுடன் அடர்ந்த வனப்பகுதியில் குகை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை...

Next Post
இலங்கை காட்டுக்குள் குழந்தையுடன் சிறுமி-வெளியான திடுக்கிடும் தகவல்கள்

இலங்கை காட்டுக்குள் குழந்தையுடன் சிறுமி-வெளியான திடுக்கிடும் தகவல்கள்

  • About
  • Blog
  • Contact
  • Gallery
  • Home
  • Sample Page

Copyright © 2026 TamilPlus

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by CookieAdmin
No Result
View All Result
  • About
  • Blog
  • Contact
  • Gallery
  • Home
  • Sample Page

Copyright © 2026 TamilPlus

English