கண்டியில் பொலிஸ் அதிகாரி ஒருவர், இராணுவ அதிகாரியை கடும் சொற்களால் திட்டுவது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் கண்காணிப்பாளர் சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்படும் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.