யாழ்ப்பாணத்தில் கணிசமான சபைகளை கைப்பற்றுவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Tharmalingam Sitharthan) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை விட்டுச் செல்லவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தமது தேர்தல் பிரச்சாரங்களின் போது பெருந்தொகையான தமிழ் மக்கள் ஜேவிபியினரை நிராகரிப்பதை காணக்கூடியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.