சமூக ஆர்வலர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல, இன்று (25) மிரிஹான சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்கினார்.