எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்து நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் (Puttalam) நேற்று (24.04.2025) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “கடந்த கால அரசாங்கங்கள் இனவாதத்தை வைத்து மட்டுமே ஆட்சி செய்தார்கள், மக்கள் நலன் பற்றி யோசிக்க வில்லை.
ஆனால் இன்று மக்களின் நலனை பற்றி சிந்திக்கும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கியுள்ளயோம்.நாங்கள் ஆட்ச்சிக்கு வந்து பல வேளை திட்டங்களை மக்களுக்காக செய்துள்யோம், இனியும் அவ்வாறே செய்வோம்.
முக்கிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் புத்தளம் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு பல இலட்சங்கள் ஒதுக்கியுள்ளளோம்.
மேலும், எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான உர மானியம், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது கடந்த காலத்திலும் பார்க்க அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.”என தெரிவித்தார்.
இதேவேளை, புதிய சட்டங்களை உருவாக்கியேனும் இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.