பல ரகசியங்களை மறைக்கும் ராஜபக்ச குடும்பத்தின், குறிப்பாக நாமல் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரான டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜேவிபி ஆதரவு செய்தி வலைத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
டேனின் கொலையைத் தொடர்ந்து, அவரது பக்கத்தை “Violent, Hateful, or Criminal Activity” என்று பேஸ்புக் நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.
அத்துடன் டேனின் அவரது தகவல்களைத் தேடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மார்ச் 23 ஆம் திகதி அவர் பேஸ்புக்கில், “நாய்களுடன் தூங்கும்போது, நாய் செல்களுடனேயே விழிக்க நேரிடும். அதனால்தான் நான் நாய்களை விட்டு தூரமாகின்றேன்” என்று பதிவிட்டிருந்தார்.
சிங்கள தேசிய இயக்கம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய டேன் பிரியசாத், ஏப்ரல் 22 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் சாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்குள் இருந்தபோது அவர் சுடப்பட்டார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் டேன் பிரசாத் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான சாகர காரியவசம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.